கன்னியாகுமரி : இன்ஸ்டாவில் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி பள்ளி தோழியிடம் நகை பறித்த இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மிகவும் செல்வ  செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர்  தனக்கு வாங்கிக் கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இதைக் கண்ட பள்ளி  தோழி ஒருவர் இன்ஸ்டாவில் இளைஞர் பெயரில் ஐடி உருவாக்கி மாணவியுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனால், அந்த இளம் பெண் நேரில் பார்க்காமலேயே இளைஞர் மீது காதல் கொண்டுள்ளார். பின்னர், இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அந்த இளம் பெண்ணிடத்தில் ஏராளமான நகைகளை பறித்தார். 

இது மாணவியின் தாயாருக்குத் தெரிய வந்ததும், குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, அவமானம் தாங்காமல் ஜூலை 12 ம் தேதி பள்ளி மாணவியின் தோழி, அவரது தாயார் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

 

More News >>