மினி சிங்கப்பூர் எங்க தலைவரே..?- வெளுத்து வாங்கும் கன்னட மக்கள்
’கொடுத்த வாக்குறிதிகள் எல்லாம் நிறைவேறவே இல்லையே’ என வாக்கு கேட்டும் வரும் அரசியல்வாதிகளை எல்லாம் வெளுத்து வாங்கி வருகின்றனர் கர்நாடக மக்கள்.
கர்நாடக மாநில பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அம்மாநிலத்தில் ஓட்டு கேட்டு செல்லும் அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. எந்தத்தெருவில் நுழைந்தாலும் மக்கள் கேள்விகள் அலறவிடுவதால் அரசியல்வாதிகள் தெறித்து ஓடுகின்றனர்.
காங்கிரஸ், பா.ஜ.க, சுயேச்சை என கட்சி பேதங்கள் இன்றி ஓட்டு கேட்டு வரும் அத்தனை அரசியல்வாதிகளும் மக்களால் துரத்தி அடிக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலின் போது பா.ஜ.க-வின் சார்பில் கர்நாடகாவை மினி சிங்கப்பூராக மாற்றூவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரையில் அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கொதிப்பில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு கட்சியின் சார்பில் தேசியத் தலைவர்களை அழைத்து வருவதே சிக்கலாகி உள்ளது.
கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பலை நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரும் அடியாக விழுந்துள்ளது. இது மக்கள் இன்னும் விழிப்புடன் தான் உள்ளனர் என்பதை நிரூபிப்பதாகவே உள்ளது என அரசியல் ஆர்வலர்களே கூறி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com