திருநெல்வேலி பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் தேள் ? ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் அதிபர் விளக்கம்

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் கடந்த ஜுலை 13ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுளள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்பவர் நான்கு கால் கிலோ அல்வா மற்றும் அரை கிலோ அல்வா பொட்டலங்களை வாங்கியுள்ளார் .வீடு சென்று அரை கிலோ அல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்த போது , அல்வாவில் தேள் இருப்பதை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து, அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாந்தி சுவிட்ஸ் அல்வாவில் தேள் இருந்ததாக கூறியுள்ளார். அதோடு, சாந்தி ஸ்வீட்ஸ் நிர்வாகம் இத்தகைய அஜாக்கிரதைக்கு பதில் அளிக்க வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தை தான் நாட போவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனிடம் பேசியபோது , 'அல்வாவின் பாக்கெட் கவர் தங்களுடையது தான் என்றும் ஆனால் தாங்கள் தயாரிக்கும் அல்வாவில் இது போன்று, தேள் கிடக்க வாய்ப்பே இல்லை . திருநெல்வேலி முழுவதும் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் பல அல்வா கடைகள் இயங்கி வருகின்றன. தங்கள் நிறுவனத்துக்கு களங்கம் விளைவிப்பதற்காக இதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் . இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளேன்; என்று விளக்கமளித்தார்.

More News >>