உடலுக்கு குளிர்ச்சியை தரும் கேரட் கீர் ரெசிபி..

வெயில் காலத்தில் வழக்கைத்தை விட தாகம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் எந்நேரமும் தண்ணீரையே குடிப்பதற்கு பதில் பழச்சாறு போன்றவை பருகலாம். இதேபோல்.. உடலுக்கு குளிர்ச்சியை தரும் கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றிலும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அந்த வகையில், இன்று நாம் கேரட் கீர் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.. 

தேவையானவை:

கேரட் - கால் கிலோபால் - அரை லிட்டர்சர்க்கரை - 200 கிராம்ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்முந்திரி - 15நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும்.

இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும். பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>