நெல்லை சந்திப்பு காமராஜர் சிலையை சுற்றி இருந்த விளம்பர பதாகைகள் அதிரடி அகற்றம் !

நெல்லை சந்திப்பு பகுதியிலுள்ள காமராஜர் சிலையை சுற்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டன.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பிலுள்ள காமராஜர் சிலைக்கு அனைத்து கட்சியினரும் நேற்று மாலை அணிவித்தனர். சிலையை ஒட்டி உள்ள சாலையில் 10க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன .அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதால், நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து, தச்சநல்லூர் மண்டல தூய்மைபணியாளர்கள் ஒரு வாகனத்தில் வந்து காமராஜர் சிலையை சுற்றிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அகற்றினர். இதற்கு , காமராஜர் சிலை பராமரிப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், 10க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு, வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். இதற்காக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

More News >>