மிஸ்டர் மோடி...!- பரபரப்பான வீடியோ காட்சி ...அலறவிட்ட ராகுல் காந்தி!
கர்நாடகா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘தி மோஸ்ட் வாண்டட்’ வீடியோ தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தின் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஏழு நாள்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி, பா.ஜ.க-வை கேள்விகளால் துளைத்து எடுக்கும் இந்த வீடியோ தற்போது ‘தி மோஸ்ட் வாண்டட்’ என்ற தலைப்பில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், எடியூரப்பா மீதான 23 ஊழல் புகார்கள், பா.ஜ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் வகையில், “பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் அதிகமாகப் பேசுகிறீர்கள். ஆனால், பிரச்னை என்னவென்றால், உங்கள் பேச்சும் செயலும் ஒத்துப்போவது இல்லை” என ட்விட்டர் பதிவிட்டும் சவால் விடுத்துள்ளார்.
இன்றைய அரசியல் களத்தில் ராகுல் காந்தியின் வீடியோ சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com