தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது உருட்டல், மிரட்டல் எல்லாம் இனி வேகாது!

தூத்துக்குடியில் கொலை முயற்சி - கொலை மிரட்டல் வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடியில் கடந்த  ஜூன் 1ம்தேதி  அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டி  கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிதங்கம் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதே போல, ஜூன் 17ம் தேதி  அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் வழக்கில் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் என்பவர் மகன் சந்திரன் (21) சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து, இவர்கள் இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்துக்கு பரிந்துரைத்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More News >>