தூத்துக்குடி பெண் காவலர்களுக்கு போக்சோ வழக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழகத்தில் பெண் காவல் ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தலைமை காவல் பயிற்சி தலைமையகத்தின் கீழ் சென்னையில் 15 மையங்களில் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி முதல் தமிழகத்தில் 691 பெண்காவலர்கள் உள்பட 784 பெண்காவலர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியின் போது, போக்சோ வழக்கை கையாள்வது, செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, ஆவணப்படுத்துதல் , வழக்கு பதிவு செய்வது எப்படி ? என பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு காவலர் பயிற்சி தலைமையக இயக்குநர் சந்தீப் ரத்தோர் ஐ.பி.எஸ் தலைமையில் சான்றிதழும் வழங்கப்பட்து.