வள்ளியூரில் பணியாற்றிய டி.எஸ்.பி சுந்தரேசன் ... துறைரீதியாக அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக இருப்பவர் சுந்தரேசன். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, தனது உயரதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை மாற்றும்படி, தனக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

உயரதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மறுப்பதால், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினை தூண்டிவிட்டு, தன்னை மிகவும் டார்ச்சர் செய்கின்றனர். தனது அலுவலக வாகனத்தை எஸ்.பி. ஸ்டாலின் பறித்துவிட்டதாகவும், தற்போது வீட்டில் இருந்து, தினமும் அலுவலகத்துக்கு தான் நடந்தே செல்வதாகவும் கூறினார். தான் நேர்மையற்றவன் என்பதை நிரூபித்தால் அலுவலக வாசலிலேயே உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, டிஎஸ்பி சுந்தரேசனின் பணிக்காலத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்வெளியாகியுள்ளன.

1) இவரது பணிகாலத்தில் 05.11.2005 முதல் 25.01.2006 வரையிலும், மீண்டும் 26.06.2006 வரையிலும் நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்ற எண்.42/2006 மற்றும் 43/2006 வழக்கு கோப்புகளில் FIR மற்றும் கைது அட்டையை தவிர, வேறு எந்த ஆவணங்களும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அங்கு பணியில் இருந்த சுந்தரேசனுக்கு 3 ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டது.

2) வள்ளியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண். 223/02 பிரிவு 448, 427, 379, 448, 427 மற்றும் குற்ற எண் 240/02 பிரிவு 294 (பி), 323, 324, 447, 506(2) ஆகிய வழக்கு விவரங்களை மறைத்து, பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததாக சுந்தேரசன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பணியில் பொறுப்பு இல்லாமல் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதாக அவர் மீது 'சென்சர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது,தகவல்களை மறைத்தன் அடிப்படையில் நடவடிக்கைக்குள்ளானார்.

3) ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, ராதாபுரம் 6-வது தெருவில் வசிக்கும் தமீன் அன்சாரி என்பவரை திருட்டு விசிடி, டிவிடி படங்களை விற்க அனுமதி அளித்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை சுந்தேரசன் லஞ்சம் பெற்றதாக புகார் சொல்லப்பட்டது.

அதேபோல, ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் முதல்தெரு பெருடி என்பவர் மீதான முடிவு பெற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவதாக மிரட்டி, அவரிடம் ரூ.40 ஆயிரத்தை லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

மேலும், ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டாஸ்மாக் பாரின் உரிமையாளர்கள் மணி மற்றும் சண்முகசுந்தரத்தை மிரட்டி, அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 கையூட்டாக பெற்றது.

ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, பன்னு சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருந்தது. அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டீக்கடை காரர் ஒருவரிடம் மாதந்தோறும் கையூட்டு பெற்றது.

பெண் ஒருவரிடம் தவறான உறவில் இருந்ததாகவும், அவரை கடுமையாக தாக்கி, காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் மீது பொய் புகாரை கொடுக்கச் செய்தது; பொய் சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்தியது போன்ற பல்வேறு குற்றங்களுங்காக 2 ஆண்டுகளாக சுந்தரேசனின் சம்பள உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல துறை ரீதியான தண்டனைகள் சுந்தரேசனுக்கு கிடைத்திருக்கின்றன.

More News >>