சைவ பிள்ளைமார்களே ஜெயின் மதம் திரும்புங்கள்!- நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

நெல்லையில் சைவ பிள்ளைமார்களே ஜெயின் மதத்துக்கு திரும்புங்கள் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவளாக சைவ பிள்ளைமார் இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் , நெல்லை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், நாம் களப்பிரர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.மகத நாடு என்று அழைக்கப்படும் இன்றைய பீகார்தான் நமது பூர்வீகம். அதனால், நாம் பூர்வீக வேளாளர் கிடையாது. நாம் விரத்தியர். சிலர் கங்க வம்சம். சிலர் ஏயர் வம்சம். 6ம் நுற்றாண்டுக்கு பிறகே, நாம் சைவராக வேளாளராக மாறினோம். தமிழுக்கும் சிவனுக்கும் தொண்டாற்றும் பாக்கியம் பெற்றோம். இன்று கூட சைவ முதலியாரில் ஜெயின் மதத்தை சில ஆயிரம் பேர் பின்பற்றுகின்றனர். எனவே, மீண்டும் ஜெயின் மதத்துக்கு திரும்புங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

புலவர் கார்த்திக் ராஜா பிள்ளை என்பவர் திகம்பர் மதுரை ஆங்குர் ஜெயின் - திகம்பர் ஜெயின் சபா என்கிற பெயரில் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார்.

More News >>