மக்காசோளம் உற்பத்தி பெருகும்... இந்தியாவில் முதன்முறையாக திருநெல்வேலியில் கோத்ரெஜின் களைகொல்லி மருந்து அறிமுகம்
கோத்ரெஜ் நிறுவனம் மக்காசோள பயிர்களின் களையை கட்டுப்படுத்த ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட புதிய பூச்சிக் கொல்லி மருந்து ,இந்தியாவிலேயே திருநெல்வேலியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் இந்தியாவில் பயிர்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் களையை கட்டுப்படுத்த புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது . இந்திய விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் சோளம் பயிரிடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது புற்கள் மற்றும் அகன்ற இழை கொண்ட களைகொல்லிகள் ஆகும். இவற்றை அழிப்பதற்காக,கோத்ரெஜ் நிறுவனம் ஜப்பான் நாட்டின் ஐ.எஸ்.கே நிறுவனத்துடன் இணைந்து, அஷிதிகா என்ற களை கொல்லி மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவிலேயே அஷிதிகா களைகொல்லி மருந்து முதன்முறையாக திருநெல்வேலியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து, கோத்ரெஜ் நிறுவனத்தின் பயிர் பாதுகாப்பு வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜவேலு கூறுகையில், விவசாயிகள் அஷிதிகாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சவை எட்டி நல்ல லாபத்தை பெருக்க முடியும். இது விலை குறைவானது. பயிர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடியது ' என்று தெரிவித்தார்.