அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. அதிகார துஷ்பிரயோகம்?நெல்லை எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த பாலசுப்பிரமணியன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது , 'என் மகன் ராமசுப்பிராயல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி நகர அமைப்பாளராக உள்ளார். இவர்,  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில், எஸ்.ஐ. ஆனந்த பாலசுப்பிரமணியனுக்கும் எனது மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, அதே தெருவில் வசிக்கும் பிரதீப்குமார் என்பவரை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது. இதை என் மகன் தான் தாக்கியதாக கூறி பெய் வழக்கு போட முயல்கின்றனர். 

மேலும், கடந்த ஜூலை 13ஆம் தேதி ஊரில் ஏற்பட்ட மோதலின் போது, எங்கள் வீட்டிலும் கல் வீச்சு ஏற்பட்டது. ஆனால், என் மகன் மீது தான் போலீசார் வழக்கு பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். எஸ்.ஐ. ஆனந்த பாலசுப்பிரமணியன் என் வீட்டுக்கு வந்து எனது மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என மிரட்டுகிறார். எனது குடும்பத்தினருக்கும் மகனுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்று கூறப்பட்டுள்ளது. 

More News >>