தொட்டா ஷாக் அடிக்கும்... பேசுனா காசு கேட்கும்... மின்வாரிய ஊழியர்களால் மேல்புத்தனேரி மக்கள் புலம்பல்
திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் மேலபுத்தனேரி கிராமத்தில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனை, மாற்ற வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 10 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த மின்வாரி ஊழியர்கள் பக்கத்திலேயே மற்றொரு மின்கம்பத்தை நட்டி, அதை பழைய மின்கம்பத்துடன் கயிற்றால் கட்டி வைத்து சென்றனர். 10 நாட்களாகியும் பின்னர், வந்து முழுமையாக பணியை செய்து முடிக்கவில்லை.
இதனால், மக்கள் மின்வாரிய ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு, மீதி வேலையை செய்ய ஆட்களுக்கு சம்பளம் தந்தால், எஞ்சியுள்ள பணிகளை முடிப்பதாக அலட்சியமாக கூறியுள்ளனர். பணம் கொடுக்கவில்லையென்றால், இந்த மின்கம்பம் அப்படியேத்தான் இருக்கும் என்றும் கூறி விட்டு சென்று விட்டனர். தற்போது , காற்று அதிகமாக அடிப்பதால் மின்கம்பம் அதிகமாக ஆடுகிறதாகவும் இதனால், எப்போது விழுமென்ற அச்சத்திலேயே வாழ்வதாகவும் மேலபுத்தனேரி மக்கள் புலம்புகின்றனர். மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.