வீரவநல்லூர் தனியார் பள்ளி பேருந்து எரிக்கப்பட்ட விவகாரம்... சிக்கிய 5 பேர்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் பயின்று வந்த சபரி கண்ணன் என்ற மாணவன் ஆசிரியர் திட்டியதாககடந்த 7ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, நேற்றிரவு பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் சடலத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, நேற்றிரவு பள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ தீ வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வீரவநல்லூர் காவல்துறையினர் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.