ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன், தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் நடிக்க உள்ளார்.
நடிகரான நெப்போலியன் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூக நீதித்துறை இணை அமைச்சராகவும் இருந்தவர். தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நெப்போலியன், அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன், கைபா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் ‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த் நைன் ரூஜ்’. இந்தப் படத்தை, எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடிக்கிறார். என்பது உறுதியாகியுள்ளது.