கடையம் அருகே சத்திரம்பாரதி பள்ளியில் வனத்துறை சார்பில் நெகிழி விழிப்புணர்வு

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்திரம்பாரதி மேல் நிலை பள்ளியில் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குனர் தஇளையராஜா உத்தரவின் படி, கடையம் வனச்சரக அலுவலர் அவர்கள் தலைமையில் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நெகிழியின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மீரா ,சாரணர் இயக்கம் ஆசிரியர் வேலு, பசுமை படை ஆசிரியர் திரிக்கூடராசாப்பன், ஜே.ஆர்.சி ஆசிரியர் அருணாசலம், நாட்டு நலப்பணி திட்டம் ஆசிரியர் சங்கரநாராயணன், கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை, பஞ்சாயத்து செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், பள்ளி வளாகத்தில் நெகிழிகள் அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

More News >>