ஐபிஎல் டி-20 : 6 விக்கெட்டு வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் முதல் ஆட்டமாக நடைபெற்றது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூர் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் தொடக்க வீரராக களம் இறங்கினார். வாட்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சுரேஷ் ரெய்னா 25 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சவுத்தியின் சிறப்பான கேட்சால் ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 128 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>