வாங்க பேசலாம்... இளம் பேச்சாளர்களை உருவாக்க தூத்துக்குடியில் பேச்சு போட்டி
தூத்துக்குடியில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் நடைபெற்ற வாங்க பேசலாம் பேச்சு போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் ஜே.சி. ஐ பேர்ல் சிட்டி குயின் பீஸ் பெண்கள் அமைப்பு சார்பில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் அஜித்தா பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் வேல் சங்கர், விஸ்வபாரதி, ஜே.சி. ஐ இந்தியா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாங்க பேசலாம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான மாணவ - மாணவிகள் மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் மற்றும் திருக்குறள் பற்றி பேசினர் . உடனடியாக தரப்படும் தலைப்பிலும் பேச்சுப் போட்டி நடந்தது. சுமார் 60க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஜே.சி .ஐ பேர்ல் சிட்டி குயின் பீஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் தலைவர் மதுமிதா செயலாளர் பாவனா சத்யா தனுஜா வழக்கறிஞர் சுபாஷினி ஜெர்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.