முண்டந்துறை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு, நம்பிக்கோவில் வனப்பகுதி சுற்றுலாதலமாக அறியப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்குள்ள லையணை ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். இங்கு , வரும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. வனப்பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் வனசரகர் யோகேஸ்வரன் தலைமையில் அகற்றினர். களக்காடு தலையணை , நம்பிக்கோவில், திருக்குறுங்குடி உள்ளிட்ட வனப்பகுதியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.