திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நாளமில்லா சுரப்பிகள் விநாடி வினா போட்டி
மாநில அளவிலான நாளமில்லா சுரப்பிகள் விநாடி வினா போட்டி: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக, 'எண்டோகுவெஸ்ட்' மாநில அளவிலான நாளமில்லா சுரப்பிகள் (Endocrinology) குறித்த விநாடி வினாபோட்டி இன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. பிரபல நாளமில்லா சுரப்பி மருத்துவ நிபுணர் . டாக்டர் சிவப்பிரகாஷ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்துகிறார்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இத்தகைய மாநில அளவிலான போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். தமிழகம் முழுவதிலுமிருந்து 17 மருத்துவக் கல்லூரிகள் இந்த போட்டியின் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றன. அவற்றில் * மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி * சி.எம்.சி வேலூர் * செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி * மதுரை மருத்துவக் கல்லூரி * திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டி 8 சுற்றுகளைக் கொண்ட ஒரு விரிவான விநாடி வினா போட்டியாக நடத்தப்படவுள்ளது. நாளமில்லா சுரப்பிகள் குறித்த ஆழமான அறிவை சோதிக்கும் வகையில் இறுதி சுற்று கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.