தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பயிற்சி பட்டறை. தொழிலதிபர் ஜே.கே.ஆர் முருகன் பேச்சு

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் 261 வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரும் தொழிலதிபருமான ஜேகேஆர் முருகன் ஏற்பாட்டில், தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்களை எவ்வாறு சேர்ப்பது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறையை துவங்கி வைக்க வருகை தந்த அக்கட்சியின் பொறுப்பாளரும் தொழிலதிபருமான ஜேகேஆர் முருகனுக்கு முன்னதாக தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்து ஆள் உயர மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் பெரியார் அம்பேத்கார் அஞ்சலை அம்மாள் ஜான்சிராணி உள்ளிட்டோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர், பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளரும் தொழிலதிபருமான ஜேகேஆர் முருகன் பேசுகையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தளபதி ஆட்சி கட்டிலில் அமருவார் என்றார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்றார். நமது தலைவர் கூறுவது போல் வீட்டுக்கு ஒருவரை களத்தில் இறக்க வேண்டும், தெருவுக்கு இரண்டு கழகத் தொண்டர்கள் மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்பது நமது இலக்கு கட்சி ஆரம்பித்து ஒன்றை கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக உறுப்பினர் சேர்த்த ஒரு தொகுதி ஸ்ரீவைகுண்டம் தொகுதி தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இன்றைய தினம் இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.

மேலும் சிறைகாண்டம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இன்றைய தினம் பயிற்சி பட்டறை நடைபெறுவதாக தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராக தளபதியாரை அரியணையில் அமர்த்துவோம் என்றார்.

வரக்கூடிய மூன்று மாதத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்டத்திற்கு தளபதியார் நேரில் வருவதாக கூறியுள்ளார் அதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு தளபதியார் வருவார் என்றார்.

More News >>