3,100 கி.மீ பயணித்து நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்..!

தென்காசியை சேர்ந்த மாணவர் நீட் தேர்வு எழுதுவதற்காக 3,100 கி.மீ பயணித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.

தமிழகம், தென்காசி பகுதியை சேர்ந்தவர் அருண் கோபிநாத். இவரது மகன் சுபாஷ் கோபிநாத். அதே பகுதியில் உள்ள ஹில்டன் பள்ளியில் படித்த ப்ளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். மருத்துவ கணவோடு நீட் தேர்வுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த சுபாஷிற்கு அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது.

நீட் தேர்வு எழுதுவதற்காக சுபாஷிற்கு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுபாஷ் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தபோது, திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தான் தேர்வு மையம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சுபாஷிற்கு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக, சென்னையில் இருந்து 2311 கி.மீ பயணிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, சுபாஷின் தந்தை அருண் கோபிநாத் கூறுகையில், “உதய்பூருக்கு எனது மகனுடன் நானும், நண்பரும் கடந்த 3ம் தேதி புறப்பட்டோம். பல்வேறு காரணங்களால் தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்து சேரவே 15 மணி நேரம் ஆகிவிட்டது. தென்காசியில் இருந்து மேலும் 15 மாணவர்களுக்கும் உதய்பூரில் தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் முதல் முறையாக வட மாநிலத்திற்கு செல்கிறோம். அங்கு, ஹிந்தி தான் முதன்மை மொழி. ஆனால், தும்ஹாரே நாம் கியா ஹே (உன் பெயர் என்ன) என்ற வாக்கியத்திற்கு மேல் எங்களுக்கு ஹிந்தி தெரியாது. அங்கு, குறைந்தபட்ச மக்களுக்கு தான் ஆங்கிலம் தெரியும். இதனால், சிரமம் இருக்கும்.

மேலும், உதய்பூருக்கு விமானத்தில் செல்வதால் அதிக செலவும் ஏற்பட்டுள்ளது. விமான கட்டணத்திற்கு மட்டும் ரூ.40,000 செலவாகி உள்ளது. இதைதவிர, உதய்பூரில் தங்குவதற்கும், உணவுக்கும் 10,000 செலவாகும். வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஓதுக்கி இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>