மே 9 ஆம் தேதி காலா இசை வெளியீட்டு விழாhellip என்ன ஸ்பெஷல்?

நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள ‘காலா’ திரைப்பட இசை வெளியீட்டு வருகின்ற மே 9ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறயுள்ளது.

‘காலா’ படத்தை ரஜினி மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிப்பாளராகவும், பா.ரஞ்சித் இயங்குனராகவும், சந்தோஷ் நாராயணன் பாடல்களை இசையமைத்து இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து காலாபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடியாக நடத்தயுள்ளனர். அப்போது, காலா பட பாடல்களுக்கு நடன மாஸ்டர் பிருந்தாவும், நடன மாஸ்டர் சாண்டி குழுவினரோடு நடனம் ஆடுகின்றனர்.

தனுசின் ‘உண்டர்பார் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்து காலா பட இசைநிகழ்ச்சியில் நேரடியாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பபட இருக்கிறது. அந்த விழாவில், ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>