திசையன்விளை அருகே நாய்கள் ஓட்டப் பந்தயம்!

திசையன்விளை.ஜூலை.28: நெல்லை கிழக்கு மாவட்டம், இராதாபுரம் கிழக்கு ஒன்றியம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற நாய்கள் ஓட்டப்பந்தயத்தினை,

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தவசி மணிகண்டன் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி. நெல்லை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர், இராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா.பிரின்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்இளையபெருமாள்மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி திசையன்விளை திமுக பிரமுகர் சுயம்புராஜன், தொழிலதிபர் தங்கையா கணேசன், ஜிபிஏம்.குமார் பேரூராட்சி உறுப்பினர் கண்ணன், ஐஆர்.ரமேஷ் ஒன்றிய கவுன்சிலர் ஜெஸி உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 50க்கும் அதிகமான நாய்கள் கலந்து கொண்டது. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் பரிசையும் பரிசு கோப்பையையும் வள்ளியூர் ஒன்றிய செயலாளரும் வள்ளியூர் ஒன்றிய சேர்மனுமான ராஜா ஞானதிரவியம் வழங்கினார்.

பரிசளிப்பு விழாவில் ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் எரிக் ஜூட், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காட்வின், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் தனபால், திசையன்விளை முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜி.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும் குமாரபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான அனிதா பி பிரின்ஸ் சிறப்பாக செய்திருந்தார்.

முதலாவது பரிசு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை கார்டன் சி கே பி ஆன் கிளப் சொக்கலிங்கபுரம் அணியினர் பெற்றனர். இரண்டாவது பரிசு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பை கில்லர் குயின் ஹைடன் ரேசிங் கதிர் அந்தோனியார் புரம் அணியினர் பெற்றனர் மூன்றாவது பரிசு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை ரெனால்டோ ஆர் ஆர் ரேசிங்கிளப்பெருங்குளம் அணியினர்பெற்றனர்.

More News >>