பாப்பாகுடி :கொலை வெறியுடன் கதவை கொத்தி கூறு போட்ட சிறுவன்... தப்பிக்க எஸ்.ஐ நடத்திய போராட்டம்

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று (ஜூலை 28)மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்.

அப்போது, ஆத்திரத்தில் இருந்த சிறுவன், காவல் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயன்றுள்ளான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் முருகன், அருகில் இருந்த வீட்டின் கழிவறைக்குள் சென்று மறைந்தார்.

ஆனாலும், சிறுவன் ஆத்திரத்துடன் விடாமல் கழிவறையின் கதவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். கதவை கொத்தி கூறு போட்டுள்ளான். இதனால், அரிவாள் கழிவறைக்குள் புகுந்துள்ளது. கழிவறைக்குள் அங்குமிங்கும் ஓடி சிறுவனின் தாக்குதலில் இருந்து எஸ்.ஐ தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலால் நிலைகுலைந்த உதவி ஆய்வாளர் முருகன், ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த சிறுவன் உடனடியாகக் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது, எஸ்ஐ முருகனை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் காவல் சீருடையில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்து மீறியதாகவும் மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து சக்தி குமார் என்பவரை தாக்க முயற்சி செய்ததாகவும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடத்தில் அவதூறாக பேசியதாகவும் வீட்டினை உடைத்ததாகவும் இரண்டு வழக்குகள் என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

உ எஸ்.ஐ என்றும் பார்க்காமல் கொலை வெறி தாக்குதலை சிறுவன் நடத்தியிருப்பதும் இது,எங்கே போய் முடியுமென்றும் தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

More News >>