நெல்லையில் கவின் ஆணவ படுகொலை வழக்கில் சகோதரர் சிறப்பு விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவரும் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியும் சுமார் 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே டி சி நகரில் கவினை நேற்று முன்தினம் ஆணவ படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுபாஷினி தந்தை சரவணகுமார் தாய் கிருஷ்ண குமரி சகோதரர் சுர்ஜித் ஆகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் சுபாஷினி சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், கிருஷ்ணகுமார் ஆகிய இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக நெல்லை மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையர் பிரசன்ன குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் இன்று சிறப்பு விசாரணை அதிகாரி விசாரணையை துவங்கினார் இந்த வழக்கில் கவின் செல்போன் போலீசாரிடம் உள்ளது அந்த செல்போனில் உள்ள தகவலை சேகரிப்பது தொடர்பாக கவினின்யின் சகோதரர் பிரவீனை இன்று விசாரணைக்காக அழைத்தனர் அதன்படி இன்று மாலை விசாரணைக்காக பிரவீன் வந்தார் அவரிடம் நெல்லை மாநகர காவல் துறை மேற்குத் துணை ஆணையர் பிரசன்ன குமார் விசாரணையை தொடங்கினார்.

அப்போது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பிரவீனிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் செல்போனில் உள்ள தகவல்களை சேகரித்துக் கொண்டனர் மேலும் இந்த சுபாஷினியை காதலிப்பது தொடர்பாக ஏதேனும் தகவலை தங்கள் குடும்பத்தில் தெரிவித்து இருந்தாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொலையான கவின் செல்வகணேஷ் மற்றும் மருத்துவர் சுபாஷினி ஆகியோரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More News >>