நீட் தேர்வெழுத அழைத்து சென்ற தந்தை மாரடைப்பால் மரணம்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் பதிவு செய்தனர். தமிழ் நாடு முழுவதும் 2,255 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 170 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுகின்றன. பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைந்துள்ளன.
தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்களுக்கு சென்றுள்ளனர். மாணவர்களுக்கு தேர்வு மைய அதிகாரிகள் காலை 9.45 மணி வரை ஹால் டிக்கெட் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்க பட்டனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
மாணவ- மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதித்து வந்தனர். தலைமுடியில் பின்னல் போட்டு வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை அனுமதித்து வந்தனர். தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களின் பூணூலை அறுத்த பிறகு தான் அதிகாரிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
ஜீவிதா என்ற மாணவிக்கு இரு மையங்களில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, நீட் தேர்வெழுத எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்ற தந்தை திருத்துறைபூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி தனியார் விடுதியில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவருடைய உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை இறந்ததை அறியாமல் நீட்தேர்வு எழுதி வருகிறார் கஸ்தூரி மகாலிங்கம். மாரடைப்பால் உயிரிந்த கிருஷ்ணசாமியின் மகனுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் முதல்வர் பழனிசாமி தமிழக அரசு சார்பில் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com