அடடே.. பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்..!
கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அம்மாநில தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில தனியார் பள்ளிகள் புதிய முயற்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் வாக்களித்தால் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, கர்நாடக மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் சசிகுமார் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, வாக்களித்த மையை காண்பித்தால், இன்டர்னல் அசெஸ்மென்ட் மதிப்பெண் வழங்கும்போது கூடுதலாக 4 மதிப்பெண்கள் (தாய்க்கு 2, தந்தைக்கு 2 மதிப்பெண்கள்) வழங்குவோம். இதைதவிர, வாக்களித்த பெற்றோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.
குடிமக்கள் வாக்களிப்பதை தவறக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மற்றபடி, நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com