கவின் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்

நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை  திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க தீவிர திட்டமிட்டுள்ளனர்.  சுர்ஜித்தின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேர்மையான முறையில் பாரபட்சமின்றி நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை தமிழ்நாடு காவல்துறை தலைமைய இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

More News >>