குழந்தைகள் சிகிச்சை குறித்த விநாடி வினா நிகழ்ச்சி... மதுரை மாணவர்கள் முதலிடம்
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை குறித்த விநாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் மதுரை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சௌதர்லிராம், தரண்யா முதலிடம் பிடித்தனர். இரண்டாவது இடத்தை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியைச் ஷானு, சஞ்சய் பெற்றனர். இவர்கள், ஆகஸ்ட் மாதம் கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான விநாடி வினா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த விநாடிவினா போட்டி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் முன்னிலையில் நடைபெற்றது.