காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் ராபர்ட் புருஸ் எம்பி கோரிக்கை
காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பிரிவில் இருந்து நீக்க வேண்டுமெனற நாடாளுமன்றத்தில் திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புருஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, எனது தொகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள். விவசாய பயிர்கள் கடும் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது. பற்றாக்குறைக்கு காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகளும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே,அவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கு இரண்டு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு , காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.