கல்வியியல் ஆசிரிய மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மூன்று நாள் ஆசிரியருக்கான பயிற்சி!

மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலியில் மூன்று நாள் ஆசிரியருக்கான பயிற்சி முகாமை நேற்று 29.07.25 தொடங்கியுள்ளது, இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் பயிற்சியில் 7 கல்லூரிகளை சார்ந்த 35 கல்வியியல் ஆசிரிய மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மூன்று நாள் நிகழ்வில் வகுப்பறையில் கற்பிக்கும் முறை மற்றும் அதற்கு அறிவியல் உபகரணங்கள் முக்கிய பங்கு பற்றியும், அறிவியல் மாதிரிகளை தயார் செய்வது பற்றியும் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

தாங்கள் செய்த அனைத்து அறிவியல் உபகரணங்களையும் கொண்டு சென்று வகுப்பறையில் சிறந்த பயிற்சிக்கு பயன்படுத்தவுள்ளனர். இதனுடைய நிறைவு விழா நாளை 31.07.25 வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதில் திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இயக்குனரக இணை இயக்குனர் முனைவர் A ரவீந்திரன், அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

More News >>