முதுகலை ஆசிரியர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி!

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களுக்கு உயர்கல்வி  குறித்து வழிகாட்டுவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கருத்தாளர்களாக பங்கேற்ற  விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் படிப்புகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இதில் திருநெல்வேலி கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சுந்தரம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் திருமதி மஞ்சுளா தேவி,  திருமதி ரூபி செல்வராணி, பள்ளக்கால் பொதுக்குடி முதுகலை இயற்பியல் ஆசிரியர் சங்கர், பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

More News >>