அமெரிக்கா காரணமல்ல!- கொரியா விவகாரம் குறித்து அதிபர் விளக்கம்
’ஆணு ஆயுதப் போர் நிகழாமல் கொரிய தீபகற்பத்தின் அமைதி நிலவுவதலுக்கான காரணம் அமெரிக்கா இல்லை’ என வடகொரிய அதிபர் கிம் கூறியுள்ளார்.
ஒரு வழியாக கொரிய திபகற்பத்தில் நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. சமீபத்தில் `இனி அணு ஆயுதச் சோதனை எங்கள் நாட்டில் கிடையாது’ என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் முன்னிலையில் அறிவித்தார்.
இதையடுத்து இரு நாட்டு அதிபர்களும் கூட்டாக, `அமைதி நோக்கி கொரியா திரும்பிவிட்டது’ என்று தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், `வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேதி மற்றும் நேரம் குறிக்கப்பட்டுவிட்டது’ என்று கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து ட்ரம்ப் விரிவாக தனது ட்விட்டர் பக்கத்தில், `தென்கொரிய ஆதிபர் மூன் இடம் மிக நீண்ட நேரம் உரையாடினேன். எல்லா விஷயங்களும் சரியாகவே சென்று கொண்டிருக்கின்றன’ என்று வேறு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவியதற்கும் அணு ஆயுதக் கொள்கையை வடகொரியா கைவிட்டதற்கும் அமெரிக்க ஒரு நாளும் காரணமில்லை. இதெல்லாம் அமெரிக்காவால் நிகழ்ந்தது என ஒரு தவறான செய்தி பொது வெளியில் பரவுகிறது’ என வடகொரியா அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com