கங்கைகொண்டான் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் கடைக்கு சீல்!
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட இத்திகுளத்தை சேர்ந்த நயினார் என்பவரின் மகன் குசலவன் (55) என்பவர் வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
மேற்படி கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திரு. மகாராஜன் அவர்கள் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததற்காக ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து கடையை 14 நாட்களுக்கு சீல் வைத்து அடைக்க பட்டுள்ளது.
மானூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திரு. மகாராஜன் மற்றும் கங்கைகொண்டான் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்செல்வனின் கடையை சீல் வைத்து அடைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.