கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேர் MBBS படிக்க தேர்வாகி சாதனை!

நெல்லை மாவட்டம் குன்னத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவர் டவுனில் டெய்லர் கடையில் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜன்னத் பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மூத்த மகள் ஆசிபா . 2வது மகள் நசிபா. இவர்கள் இருவரும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

மூத்த மகள் ஆசிபா கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ளார். பிளஸ் டூ தேர்வில் 600 - க்கு 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே 2-வது மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மருத்துவப் படிப்பிற்காக எழுதிய நீட் தேர்வில் 720 -க்கு 434 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டதில் இவருக்கு அரியலூர் மருத்துவ கல்லூரியில் MBBS படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அரசு பள்ளியிலேயே படித்து முதல் முயற்சியிலேயே தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த ஒரே மாணவி ஆஷிபா என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 3 முறை திரும்ப திரும்ப நீட் தேர்வு எழுதி 4 மாணவிகள் டாக்டர் படிப்பதற்கு தேர்வாகியுள்ளனர்.

More News >>