நெல்லை கவின் படுகொலை: சுபாஷினியின் தன்னிலை விளக்க வீடியோ வெளியான நிலையில் மிகுந்த பரபரப்பு!

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொலை செய்த குற்றத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், (30.07.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சுபாஷினியின் தன்னிலை விளக்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது,

அதில் சுபாஷினி பேசியுள்ளதாவது,

நான் கவினும் ரொம்ப ட்ரூவா லவ் பண்ணோம். கொஞ்சம் செட்டில் ஆக டைம் தேவைப்பட்டுச்சு. மே 30-ஆம் தேதி சுஜித்தும் கவினும் பேசிக்கிட்டாங்க. அப்போ அந்த டைம்குள்ள வந்துட்டு அப்பாகிட்ட சுஜித் சொல்லிட்டான். சோ, அப்பா வந்துட்டு இந்த மாதிரி லவ் பண்றியான்னு என்கிட்ட கேட்டப்ப இல்லைப்பா, நான் லவ் பண்ணல அப்படின்னு சொல்லிட்டேன். ஏன்னா கவின் என்கிட்ட டைம் கேட்டிருந்தான், இன்னொரு ஆறு மாசம் கழிச்சு சொல்லு, ப்ளீஸ் அப்படின்னு சொல்லிட்டு சொல்லியிருந்தான். அதனால வந்துட்டு, நான் வந்துட்டு அப்பாகிட்ட அன்னைக்கு சொல்லல.

அதுக்குள்ள நெக்ஸ்ட் அப்கமிங் மந்த்குள்ள இப்படி ஆயிடுச்சு. ரெண்டு பேருக்குள்ள என்ன கான்வர்சேஷன் போச்சுங்கிறது தெளிவா தெரியாது. ஆனால் கவினுக்கு போன் பண்ணி சுஜித் வந்துட்டு, பொண்ணு கேட்க வாங்க, இவ மேரேஜுக்கு மூவ் பண்ணாதான் அடுத்து என்னோட ப்ரொஃபஷனை பார்க்க முடியும் அப்படின்னு சொன்னான், அப்படிங்கிறது எனக்கு தெரியும் கண்டிப்பா.

அதுக்கப்புறமா வந்துட்டு, 27 என்ன நடந்துச்சு அப்படின்னா, அன்னைக்கு கவின் வராங்கிறது எனக்குத் தெரியாது. நான் 20-ஆம் தேதி ஈவினிங் தான் வரச் சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு தலையில சூச்சர்ஸ் இருந்ததனால, நான் வந்துட்டு ரூம் பார்த்துட்டு அட்மிட் பண்ணனும்னு யோசிச்சிருந்தேன். அப்ப வந்துட்டு, ஆப்டர்நூன், மங்கம்மாள் சாலைக்கிட்ட வந்து நின்னுட்டுதான், எனக்கு வந்துட்டு தெரியவே செய்யும், அவங்க வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு, சோ, டைரக்டா நான் அவுங்க அங்க கூட்டிட்டு ஐ.பி-க்கு கூட்டிட்டு போயிட்டேன்.

கூட்டிட்டு போயிட்டு, கவின் உள்ள வந்தான். பட் அவங்க மாமாகிட்டயும், மாமிகிட்டயும் மட்டும்தான் நான் பேசிட்டிருந்தேன். பேசிட்டே அப்படியே கவின் வெளியே போயிட்டான். அங்க இருந்து கிளம்பறப்பதான், அவங்க மாமாவும், மாமியும் கிளம்பறப்பதான், கவின் எங்கே அப்படிங்கிறதையே நாங்க யோசித்தோம்.

நான் ட்ரீட்மெண்ட் ப்ரொசீஜர்ஸ் எல்லாம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டு இருந்தேன். அப்ப யோசிச்சுட்டு, நான் வந்துட்டு சொன்னேன். அவங்க மாமி வந்துட்டு கால் பண்ணாங்க, அவனுக்கு எடுக்கல. நானும் கால் பண்ணேன் எடுக்கல. நீங்க வேணா பசிக்குதுன்னு சொன்னாங்க அவங்க மாமி. சாப்பிட போங்க நான் வேணா வரச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

அதுக்குள்ள, இப்படி ஆயிடுச்சு. சோ, வந்துட்டு, இதைத் தேவையில்லாம நிறைய இஷ்டத்துக்கு யாரோ அவதூறை கிளப்ப வேண்டாம். உங் உங் உங்களுக்குத் தோணினது எல்லாத்தையும் பேசாதீங்க. எங்க அப்பா அம்மாக்கு இதுல எந்த சம்பந்தமுமே கிடையாது, அவங்களுக்குத் தெரியாது. இதை இதோடு விட்டுடுங்கள். விட்டுடுங்கள். அவ்வளவுதான். என வீடியோவில் பேசியுள்ளர்.

More News >>