திருநெல்வேலி ஆணவ படுகொலை வழக்கு விசாரணையை நிகழ்வு இடத்திலிருந்து தொடங்கியது சிபிசிஐடி

திருநெல்வேலி கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி கவின் என்ற மென் பொறியாளர் மாற்று சமூகத்து பெண்ணை காதலித்ததால் அப்ப பெண்ணின் சகோதரன் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை முதலில் சுர்ஜித்தும் தொடர்ந்து அவரது தந்தையுமான காவல் உதவி ஆய்வாளர் சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தன்மை மற்றும் முக்கியத்துவம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி தமிழக அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கொலை நடைபெற்ற நிகழ்வு இடத்திலிருந்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.

வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜ் நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளார்.

சிபிசிஐடி போலீஸ விசாரணையில் தற்போது இயங்கும் தடய அறிவியல் ஆய்வகத்தின் அதிகாரி ஆனந்தி தற்போது வேதா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

More News >>