கவின் உடலுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொலை செய்த குற்றத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்நிலையில் கொலையான கவின் உடலுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.