நெல்லை கவின் ஆவண படுகொலை: திருமாவளவன் தலைமையில் பாளையங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆவண படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் கவினின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் கவினின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆணவ படுகொலை தொடர்பாக சட்டசபையில் தனியாக ஆணவ படுகொலை தடுப்பதற்கான சட்டத்தை ஏற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை லூர்து நாளின் சிலை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும் வருவாய்த்துறை, காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

More News >>