மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே எற்கும்: முதலமைச்சர் பழனிசாமி

நீட் தேர்வு எழுத மகனை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச்சென்ற தந்தை மரணம் அடைந்தார். தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது தெரியாமல் மகன் நீட் தேர்வு எழுதினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகன் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே சம்மணம் என்ற இடத்தில்  நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததது. இதனையடுத்து இன்று காலை நீட் எழுத கஸ்தூரி மகாலிங்கத்தை தந்தை எர்ணாகுளம் அழைத்து வந்துள்ளார்.

மாணவன் தேர்வு மையத்திற்குள் சென்றபின் திடீர் மாரடைப்பு காரணமாக தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் பணியாற்றிய கிருஷ்ணசாமி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு மையத்தை கண்டுபிடிக்க பெற்றோர்கள் மனஉளைச்சல் அடைந்துள்ளனர்.  கிருஷ்ணசாமி மன அழுத்தம் ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்..

மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் பொது நிவராண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவி மகனின் மேற்படிப்பிற்கு உதவுமாறு கேட்டுகொண்டதால் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே எற்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

More News >>