நெல்லை மாவட்ட மைய நூலத்தில் முப்பெரும் விழா!

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து கவிமணி தேசிய விநாயகம், தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் ஆகியோர் பிறந்த நாள் விழா மற்றும் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் விழா மாதாந்திர இலக்கிய நூல் அறிமுக கூட்டம் ஆகிய முப்பெரும்விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

வாசகர் வட்டத் துணை தலைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வாசகர் வட்டத்தைச் சார்ந்த கவிஞர் சு.முத்துசாமி அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் செ.திவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாகுடி இரா செல்வமணி கவிமணி தேசிய விநாயகம், தமிழறிஞர்கள் மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞர் ஆகியோர் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

சதாவதானி செய்குதம்பி பாவலர் தீரன் சின்னமலை குறித்து தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன் பேசினார்.

வீரவநல்லூர் செல்வன் எஸ்.பி.கோமதிநாயகம் ரூபாய் ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலரானார். கவிஞர் சக்தி வேலாயுதம் எழுதிய ஒரு துளி அறம் என்ற நூலை சித்த மருத்துவ கல்லூரி இருளப்பன் கோபாலகிருஷ்ணன், கவிதாயினி சாரதா வேணுகோபால் எழுதிய கும்மி பாடல்கள் நூலை ஆசிரியர் வைகுண்ட ராஜா, நல்லாசிரியர் செ.ராஜேந்திரன் எழுதிய கடலுக்குள் வானம் என்ற நூலை ஆசிரியர் சிவசெல்வ மாரிமுத்துவும் அறிமுகம் செய்து பேசினார்.

கவிஞர் சிற்பி பாமா, முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன் நூலகர் அகிலன்முத்துக்குமார் எழுத்தாளர் தளவாய் மாடசாமி, முன்னாள் எஸ்.ஐ பாக்யராஜ், நெல்லை செல்வம்,பட்டிமன்ற பாவலர்.எல்.சுப்பிரமணியன், ஆசிரியை திரிபுரசுந்தரி, ஆசிரியர் ஜோசப், ஆசிரியர் மைதீன் பிச்சை, வழக்கறிஞர் வேணுகோபால், சட்டக் கல்லூரி மாணவி ஜெயநந்தினி, கவிஞர்சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இயற்கை வள பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு குறித்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவாக நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வாசர் வட்ட தலைவர் அ.மரியசூசை சிறப்பாக செய்திருந்தார்.

More News >>