கவின் ஆணவக் கொலை ... ஆறுமுகமங்கலம் ஊர் மக்கள் எடுத்த முக்கிய முடிவு

நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள இன்று காலை 9 மணிக்கு கவினின் தந்தை சந்திரசேகர் உள்பட கிராம மக்கள் திருநெல்வேலிக்கு வரவுள்ளதாக அவரின்  தாய் மாமா இசக்கிமுத்து தெரிவித்துள்ளார். தமிழக எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் திருநெல்வேலி வரும் நிலையில், ஆறுமுகமங்கலம் ஊர் மக்கள் ஊர் பொதுக் கூட்டம் நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே, கவின் கொலை வழக்கில் காவல்துறை விசாரணை நியாயமாக நடக்கும் என்று நம்ப முடியவில்லை என்றும் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு விசாரணையை மாற்ற வேண்டும் நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் காவல்துறையினரே இந்த குற்ற  வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. கவின் செல்வ கணேசன் குடும்பத்தினர் இந்த விசாரணையில் ஒரு மாற்றம் தேவை என்பதை விரும்புகின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதையே வலியுறுத்துகிறது  என்றார்.

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறையின் சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என பேசியிருப்பது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

More News >>