தூத்துக்குடியில் கஞ்சா போதையில் இருந்தவர்களை தட்டிக் கேட்ட பார்வையற்ற இளைஞர் அடித்துக் கொலை
சமீபகாலமாக தென்மாவட்டங்களில் கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது தூத்துக்கடியில் நடந்துள்ள கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்கடியில் அருள்ராஜ் என்ற பார்வையற்ற இளைஞரின் வீட்டில் கஞ்சா புகைத்து விட்டு, சதீஷ்ரீதன், முனீஸ்வரன், விஸ்வராஜ்,காதர்மீரான் ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை, அருள்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் 3 நாட்களுக்கு முன்பு அருள்ராஜை கடத்தி சென்று, அடித்து கொலை செய்துள்ளனர். கடந்த 3 நாட்களாக உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில், பாண்டுக்கரை பகுதியில் அருள்ராஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.