101அறிஞர்கள் ஓவியம் வரைந்து சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா சாதனை

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் . இவரது மனைவி வினோதா. இந்த தம்பதியின் மகன் ஹரிகிருஷ்ணா ( 14) புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் படித்து வருகிறார் . சிறுவயதிலிருந்தே ஓவியக்கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். 

கடந்த 7 ஆண்டுகளாக இவர் சிவராம் கலைக்கூடத்தில், ஓவிய பயிற்சி பெற்று வருகிறார். ஆசிரியர் மகாராஜனும், பயிற்சி ஆசிரியர் கணேசனும் வழிகாட்ட, ஓவியக் கலையில்  திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து வந்தார். இந்த நிலையில், தனது முதல் சாதனையாக,  101 விஞ்ஞானிகளின் நிழல் ஓவியங்களை ஹரிகிருஷ்ணா வரைந்து அசத்தியுள்ளார். 

இந்த ஓவியங்களை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் சிவராம் கலைக்கூடமும் இணைந்து   ஆகஸ்ட் 2 ம் தேதி  திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் காட்சிப்படுத்தின. விஞ்ஞானி டாக்டர் ப்ரஃபுல்லா சந்திர ராய்  பிறந்தநாளை முன்னிட்டு விண்ணைத் தொட்ட விஞ்ஞானிகள் 101 என்ற தலைப்பில் நடந்த இந்த  கண்காட்சியை மாவட்ட அறிவியல் அதிகாரி முத்துக்குமார் தலைமையில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தொடங்கி வைத்தார். இதில் கல்வியாளர் லெனின் ,முன்னாள் மாவட்ட நூலகர் முத்துகிருஷ்ணன், வெற்றிவேல் டுட்டோரியல்  முருகவேல் ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன், திருவனந்தம், கிருபா, கோவிந்தன் ஹரி கிருஷ்ணா தங்கை  கனிஷ்கா ஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நாளையும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. 

 

 

More News >>