எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி...விஷயம்தான் வேறு!

நெல்லை எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற திருச்சி வாலிபரிடம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடியில் நேற்று பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு திருநெல்வேலி வந்த எடப்பாடி பழனிச்சாமியை இரவு 11 மணி அளவில் பெருந்திரளாக கூடியிருந்த அதிமுகவினர் வரவேற்றனர். அப்போது. அங்கு வந்திருந்த அதிமுக பிரமுகர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருச்சியை சேர்ந்த ராகுல்காந்தி என்ற வாலிபர் பணத்தை திருட முயன்றுள்ளார். இது தொடர்பாக, புகார் வந்ததின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார் ராகுல்காந்தியை  விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

More News >>