இவரிடம் எதுவுமே மாறவில்லை!- சிம்புவால் உருகிய அருண் விஜய்
எஸ்.டி.ஆர் என ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படும் நடிகர் சிம்பு குறித்து சக நடிகரான அருண் விஜய் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. ஆனால் அவரின் பேரில் ஹிட் படங்கள் என்பது மிக சொற்பமாகவே இருக்கின்றன.
மேலும், பல ஹீரோயின்களோடு லவ் பிரேக்-அப் ஆனதால், சிம்புவுக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி எக்கச்சக்கமாக ஆனது. இதனால், அவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற ரீதியில்தான் நடித்து வருகிறார்.
ஆனால், சமீபத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், `நான் திரும்ப சினிமாவில் கலக்குவேன்’ என மார்தட்டினார். இந்நிலையில், மனிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மல்டி-ஹீரோ சப்ஜெக்டான, `செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார் எஸ்.டி.ஆர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய் உள்ளிட்டோரும் சிம்புவுடன் நடிக்கின்றனர். இதையொட்டி அருண் விஜய் சிம்புவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன், `சிம்பு என்கின்ற இந்த இளைஞனிடம் எனக்குத் தெரிந்த இத்தனை ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை.
எப்போதும் அவர் ஒரு சாம்பியன். இளகிய மனம் கொண்டவராகவும் தீர்க்கமான நடிகராகவும் வலம் வருபவர் சிம்பு. இந்த சந்தோஷத்தை எப்போதும் உயிர்ப்போடு வைத்திரு சிம்பு. இனி உன் வாழ்க்கையில் நீ தொடும் அனைத்திலும் வெற்றிதான். மென்மேலும் உயர்க’ என்று உருக்கமாக தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com