தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை... தெற்கு வீரபாண்டியபுரம் மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தெற்கு வீரபாண்டியபுரம், ஏ. குமரட்டியபுரம், ஏ.குமரகிரி மக்களிடம் சுமார் 242 ஏக்கர் இடம் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தியதில் உரிய இழப்பீடு வழங்க கோரி,  தூத்துக்குடியில் முதல்வர் வருகையின் போது தெற்கு வீரபாண்டியபுரம் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இது குறித்து  தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் தெற்கு வீரபாண்டியபுரம் மக்கள் சார்பில் பேட்டியளித்த ஸ்டெர்லைட் நில மீட்பு மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்க தலைவர் ச.மு.காந்தி மள்ளர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபிவிருத்திக்காக தெற்கு வீரபாண்டியபுரம், ஏ. குமரட்டியபுரம், ஏ.குமரகிரி மக்களிடம் சுமார் 242 ஏக்கர் இடம் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தியது .இந்த இடத்திற்கு ஒரு ஏக்கருன்னு 6,50,000 இழப்பீட்டுத் தொகை வழங்க 11- 10- 2013 அன்று தூத்துக்குடி தனி வட்டாட்சியாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. 

ஆனால், இன்று வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.  எனவே,  இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் அல்லது ஸ்டெர்லைட் அபிவிருத்திக்காக கையகப்படுத்தி இடத்தை தமிழக அரசு,  ரத்து செய்து விட வேண்டும். அப்படியென்றார்,   இடம் கொடுத்த மக்களுக்கே திருப்பி வழங்க வேண்டும் அல்லது நியாயமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் . இதை வலியுறுத்தி தெற்கு விரபாண்டியபுரம் கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 4) காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போகிறோம் என தெரிவித்தனர். 

பேட்டியின் போது  இயக்கத்தின் பொறுப்பாளர்கள் எம் கோபாலகிருஷ்ணன் தெற்கு வீரபாண்டியபுரம், சொக்கலிங்கம் ஏ குமரெட்டியாபுரம்,மணி என்ற பெருமாள் எ குமரட்டியாபுரம், மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர். தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேரடியாக வந்து துவக்கி வைக்கிறார் .இந்நிலையில் அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News >>