நெல்லையில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பில் ஐவர் கால்பந்து போட்டி ... முதல் பரிசு 1 லட்சம்!

நெல்லையில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பில் ஐவர் கால்பந்து போட்டி ஆகஸ்ட் 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை ட்ரெபாஸ் ஸ்போர்ட்ஸ், செல்வி கயிறு தயாரிப்பு நிறுவனம், ட்லீட்டா டென்டல் ஹவுஸ், ஜோஷாம் டென்ட்டல் பல் சீரமைப்பு மையம் , ஜர்னி ஆப் ஈகிள்ஸ் அட்வெஞ்சர் கிளப்,பிரவுன் அண்டு போல்டு தோள் பாதுகாப்பு சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து ஸ்பான்ஷர் செய்துள்ளன. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி காலை 7மணிக்கு நாக்அவுட் ஆட்டங்கள் தொடங்குகின்றன. அடுத்த நாள் (ஆகஸ்ட் 24) காலை 7 மணியில் இருந்து காலிறுதி,அரையிறுதி சுற்றுகள் நடக்கின்றன. மாலை 7 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்18ம் தேதி அணிகள் முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆகும்.

அணி வீரர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்படும். இன்சூரன்சும் செய்யப்பட்டுள்ளது. கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ஒரு லட்சம் ரொக்கப்பரிசுடன் சுழற்கோப்பையும் இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் 50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். 3வது , 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு 10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் விதிகளை பின்பற்றி ஆடும் சிறந்த அணி, சிறந்த கோல்கீப்பர், அதிக கோல் ஸ்கோரர் , சிறந்த வீரர், சிறந்த பயிற்சியாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. விரிவான தகவல்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆரோன் (9629285555 ) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அணிகள் பதிவுக்கு காணிக்கராஜ் (9489521100) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

More News >>