விவசாயிகள், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் - நெல்லையில் இ.பி.எஸ் உறுதிமொழி

நெல்லை மாவட்டத்தில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரத்திற்காக வருகை தந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆர்.ஆர்.இன் ஹோட்டலில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கட்டடத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். 

விவசாயிகள் தரப்பில், மானூர் பெரியகுளத்திற்கு கோதையாறு அணைக்கட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருதல், காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குதல், அ.தி.மு.க.வின் குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், பயிர் காப்பீட்டு நிறுவனத்தை அரசே நடத்துதல், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 விலை நிர்ணயம், பயிர்க் கடன் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்தல், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப் பெறுதல், கடந்த 2024 கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. கட்டடத் தொழிலாளர்கள் கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், எம்-சாண்ட் தடையின்றி கிடைக்கவும், ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயர்த்தவும் கோரினர்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் . இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்யப்படும் . பாபநாசம், மணிமுத்தாறு, தாமிரபரணி நதிகளில் உள்ள வண்டல் மண்ணை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்படும்.  வணிகர்களும் விவசாயிகளும் ஒருவருக்கொருவர் சார்ந்துள்ளதால், இரு தரப்பினரின் நலனும் பாதுகாக்கப்படும்' என்றார். 

More News >>